Sunday, 30 March 2014

இந்துப்பு :



இந்துப்பு :
உப்பை சேர்க்காத பொருள்களே இல்லை.உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்று சொல்வார்கள்.இன்று உப்புள்ள பண்டம் குப்பையிலே என்று சொல்லும் அளவுக்கு அயோடின் கலந்த உப்பின் கோர முகம் உள்ளது.அயோடின் சேர்க்கப்பட்ட உப்பால் நமது உடலில் உள்ள தைராய்டு சுரப்பியின் செயல்பாடு பாதிக்கப்பட்டு முக்கியமான நாளமில்லாச் சுரப்பியான தைராய்டு சுரக்கும் சுரப்பு நீர்களான T3 ,T4 ஆகியவை பாதிக்கப்பட்டு விளைவாக உடலின் முழு வளர்சிதை மாற்றமும் பாதிக்கப்பட்டு நடைப் பிணங்களாக உலவும் அவலத்தை நாம் வெகு சீக்கிரம் நாம் காணலாம்.கண்கள் பிதுங்கி கழுத்தில் பெரும் கழலைக் கட்டி வரும் வாய்ப்பு உள்ளது.
பல மருத்துவ குணங்கள் கொண்டது இந்துப்பு . இந்துப்பு சேர்ந்த மருந்தால் குருடனும் பார்வை பெற வல்ல மருந்தொன்றை திருமூலர் வைத்திய சாகரத்தில் சொல்லி உள்ளார்.
அந்தப் பாடல்,
இந்துப்பு திப்பிலி இயல் பீதரோகிணி
நந்திப்பூச் சாற்றில் நயந்து அரைத்திட
அந்தகன் கண்ணுக்கு அருந்ததி தோன்றிடும்
நந்தி நாதன் நயந்து உரைத்ததே
.
-திருமூலர் வைத்திய சாகரம்-
இந்துப்பு, திப்பிலி,பீத ரோகிணி ஆகியவற்றை சமமாய் எடுத்து நந்தியாவட்டம் பூச்சாற்றில் அரைத்து கண்ணிலிட குருடன் கண்ணுக்கு அருந்ததி என்னும் நட்சத்திரம் தெரியும் என்று நந்திக்கு சிவன் கூறியுள்ளார்,என்பதே இதன் பொருள்.
இப்படி மிக உயர் தன்மையுள்ள இந்துப்பை சோற்றுப்பிற்கு பதிலாக உபயோகித்து வந்தால்,உடலிலுள்ள துர் நீர்கள் எல்லாம் நீங்கி உடல் நலம் பெறும்.காயசித்திக்கும்,பத்தியத்திற்கும்,காய கற்பத்திற்கும் ஏற்ற உப்பு இது.

1 comment:

  1. ஐயா ! எனது பெயர் நியாஸ் எச்.எம் நாடு இலங்கை எனக்கு பீதரோகிணி ,இந்துப்பு ,திப்பிலி ,நந்திய வட்டை இவை தங்களிடம் தரமான புதிய வகை கிடைக்குமா இதனை தங்களுடைய நாட்டுக்குள் அனுப்பி வைக்க முடியமா தங்களின் தொலை போசி இலக்கத்தை தர முடியுமா ? 0094775392419

    ReplyDelete