Monday, 31 March 2014

சாப்பிடும் போது கவனிக்க வேண்டியவை..

அழுகுரல் ஒன்று கேட்டது:


சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது அழுகுரல் ஒன்று கேட்டது,
உற்று கவனித்தேன்..

தட்டிற்கு வெளியே இரண்டு சோற்றுப் பருக்கைகள் இறைந்து கிடந்தன, அவைதாம் அழுதுகொண்டிருந்தன.
"எதுக்கு இப்படி அழறீங்க" என்று கேட்டேன்?.

அதில் ஒன்று கண்ணீரோடு தன் கதையைச் சொன்னது.
"ஒரு ஏழை விவசாயி... கடனை உடனை வாங்கி விதை நெல் போட்டு, வயலை உழுது, நாற்று நட்டு,களை பறித்து,பயிர் செய்து, நீர் பாய்ச்சி ரொம்ப கஷ்டப்பட்டு எங்களை வளர வைத்தார்..

நாங்களும் நல்லா வளர்ந்தோம்,
என்னோட சகோதர மணிகளில் சிலரை எலிகள் நாசம் செய்தன.. பறவைகள் கொத்தித் தின்றன.. தப்பிப் பிழைத்த நாங்கள் அறுவடைக்குத் தயாரானோம்.
அறுத்து, களத்துக்கு கொண்டு வந்து, தூற்றி அதிலும் வீணாகிப்போன சகோதரமணிகள் தவிர்த்து பெரிய பெரிய பைகளில் எங்களை அடைத்து வைத்தார்கள்.

அப்புறம் நெல் மணிகளிலிருந்து உமி நீக்கி எங்களை அரிசியாக்கும் போது காணாமல் போன சகோதரமணிகள் நிறைய பேர்.

விற்பனைக்கு கடையில் வைத்திருக்கும் போது மூட்டைகளில் விழுந்த ஓட்டைகளில்சிலரும், எடை போட்ட போது கொஞ்சம் பேரும் வீட்டுக்கு நீங்கள் வாங்கி வந்த போது, அரிசி களைந்து சமைக்கும் போது என்று எல்லாவற்றிலும் தப்பிப் பிழைத்து உங்களுக்கு உணவாகி உங்கள் தட்டிற்கு வந்து சேர்ந்தேன்.

இத்தனை பேர் உழைப்பில் விளைந்த என்னை.. பல இடர்ப்பாடுகளை கடந்து வந்த என்னை.. இப்படி வீணாக்கினால் அழாமல் என்ன செய்ய?" என்றது.

உணவை வீணாக்காதீர்கள்; உழைப்பையும்

சொந்த காசில் சூனியம் ...


பனையை வெட்டினால்.... நதிகள் வறண்டு போகும்...!
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர். அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர்.
அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும், ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது. இதனை உன்னிப்பாக கவனித்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர். இதன் காரணம் என்னவென்றால் பனைமரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிச்செல்லும்.
அதுமட்டுமில்லாமல் தனது வேரை குழாய் போன்று மாற்றி தரைப்பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு செல்லும். இதனால் அனைத்து நிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி அது உற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல் நூறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெறுக்கெடுத்து வற்றாத ஜிவ நதியாக ஓட வழிவகை செய்யும்...
இந்த பனைமரங்களை வெட்ட வெட்ட ஒவ்வொரு நதியாக வறண்டு கொண்டேவரும் என்பது மட்டும் உண்மை... நதிகளை காப்பாற்ற பனைமரங்களை வெட்டுவதை தவிர்க்கவும்.
குறைந்தபட்சம் உங்கள் நண்பர்களுடனாவது பகிர்ந்துகொள்ளுங்கள்

அரிசியும் உருளைக்கிழங்கும்



அரிசி உணவுக்கும்
உருளைக்கும் ஒத்துவராது!
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உருளைக்கிழங்கில் செய்த உணவு என்றால், ஒரு கை பார்த்துவிடுவது வழக்கம். உருளைக்கிழங்கில்நார்ச்சத்து இல்லாததால், சரியாக செரிமானம் ஆகாமல் மிக அதிகமான வாயுத் தொல்லையை ஏற்படுத்தும். அதை தவிர்ப்பது நல்லது.
ஏனெனில், அரிசியில் இருக்கும் அதே கார்போஹைட்ரேட் தான் உருளையிலும் இருக்கிறது. எனவே, அரிசி உணவு சாப்பிடும்போது, உருளைக்கிழங்கு நமக்குத் தேவையில்லை. ஆனால், நாம் என்ன செய்கிறோம்? சாம்பார் சாதத்துக்கு உருளைக்கிழங்கை ரோஸ்ட் செய்து விரும்பி சாப்பிடுகிறோம். அரிசி உணவே இல்லாத சமயத்தில் கிழங்கை சேர்த்துக் கொள்ளலாம். அதுவும் உருளைக்கிழங்கை வேகவைத்துதான் உண்ணவேண்டும்.
எண்ணெயில் பொரித்து சாப்பிடக்கூடாது. நார்ச்சத்து இல்லாததால், இரவில் சாப்பிடக்கூடாது. ஆனால், இதனுட‌ன் நார்ச்சத்து உள்ள உணவுகளை சேர்த்துக் கொண்டால், அதன் பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளமுடியும்

தேன் - 9094751956


தேன்



*பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட நல்ல தூக்கம் வரும், இதயம் பலம் பெறும்.
* பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி உ ண்டாகும்.
* மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் புது ரத்தம் உண்டாகும்.
* எலுமிச்சை பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.
* நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும்.
* ஆரஞ்சுப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.
* ரோஜாப்பூ குல்கந்தில் தேன் கலந்து சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.
* தேங்காய்பாலில் தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண், வாய்ப்புண்கள் ஆறும்.
* இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தம் தீரும்.
* கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்த் சோகை போகும்.
* தேனில் சுண்ணாம்பு கலந்து தடவ கட்டிகள் உடையும் அல்லது வீக்கம் குறையும்.
சுத்தமான 
பெட்டி தேன்  கிலோ ரூ. 300.00
மலை தேன் கிலோ ரூ.600.00
மூலிகை தேன் கிலோ ரூ800.00