Sunday, 30 March 2014

ஆவாரை :- Cassia auriculata

ஆவாரை :-  ( ஆவாரை துள் கிடைக்கும்)  ரூ90.00ஃ-

ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ ! 

இது சித்தர்கள் கூறும் ஒரு தெய்வ வாக்கியம் .

இது ஒரு காய கலப்ப மூலிகை .

மதிப்புத்தேரியாமல் சாலைகளின் ஓரம் மஞ்சளாக பூ பூத்து மண்டிக்கிடக்கிறது. இதன் அனைத்து பகுதிகளும் சிறந்த பலன் அளிக்கும் மருத்துவ குணம் உடையது. அதன் வேர் இலைகள் ,பூ ,கிளைகள் ,காய்கள் அனைத்தையும் சேர்த்து ஆவாரை பஞ்சக சூரணம் தயாரித்து அதை தொடர்ந்து உபயோகித்தால் சர்க்கரை வியாதி குணமாகிறது.

இதன் பூக்களை காயவைத்து காலையில் ஆவரம் டீ தயாரித்து அருந்தலாம் .
இதுவும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் .இதனுடன் நாகப்பழத்தின் கொட்டையையும் சேர்த்து பயன் படுத்தலாம் .அதிக பயன் தரும் .

உடலில் தேய்த்து குளித்தால் சிலர் மேனியில் வரும் மேனி வாடை போய் விடும் .
சிறந்த தோல் காப்பான் .தொடர்ந்து பூசி குளித்து வர உடல் தங்கம் போல் ஆகும் .
இது ஒரு மொத்த மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய ஒரு தாவரமாகும்,.
நமது உடலில் இருக்கும் பல மில்லியன் செல்களிலும் சேரும் கழிவுகளை நீக்க முடியாமல் போகும் போதுதான் வியாதிகள் வருகின்றன என்பது நமது கிழை நாட்டு வைத்திய தத்துவும் .

அந்த செல்களில் இருக்கும் ப்ரீ ராடிகால்சை நீக்க நமது பல மூலிகைகள் உதவுகின்றன ..
இது வெற்றியடைந்தால் செல்களுக்கு அழிவில்லை .பின் என்றும் இளமைதான் .
இவைகளையே காயகல்ப்ப மூளிகள் என நமது சித்தர்கள் கூறுகிறார்கள் .எனவே அவர்கள் கூறும் காயபலப்ப மூலிகைகளை மட்டுமாவது தொடர்ந்து எதோ ஒரு தகுந்த முறையில் உபயோகித்தால் நாம் முதுமையை வென்று ,நோயின் பிடியில் இருந்து தப்பி வாழலாம் .
மண்ணில் நல்ல வண்ணம் காணலாம்.

நமது வீட்டில் கழிவு நீரில் அடைப்பு ஏற்ப்பட்டு ஓடாமல் நின்றால் வீடு என்ன கதியாகும் .அதே கதிதான் செல்களில் நீக்க வேண்டிய பகுதி நீக்கப்படாவிட்டால் நடக்கிறது .
இது குறித்த ஒரு ஆராச்சியின் முடிவுகள் இதோ !

1)

Cassia auriculata , commonly known as “Tanner's cassia,” ( ஆவாரை ) is widely used in Indian folk medicine for the treatment of diabetes mellitus. Oral administration of 0.45 g/kg body weight of the aqueous extract of the flower for 30 days resulted in a significant reduction in blood glucose and an increase in plasma insulin, but in the case of 0.15 and 0.30 g/kg, was not significant. The aqueous extract also resulted in decreased free radical formation in tissues studied. Thus, this study shows that Cassia auriculata flower extract (CFEt) has hypoglycemic action. The decrease in lipid peroxides and increase in reduced glutathione (GSH), superoxide dismutase (SOD), catalase (CAT), glutathione peroxidase (GPx) and glutathione S -transferase (GST) clearly show the antioxidant properties of CFEt. The effect of CFEt was most prominently seen in the case of animals given 0.45 g/kg body weight. CFEt was more effective than glibenclamide.

2)The ethanol extract of the roots of Cassia auriculata was studied for its nephroprotective activity in cisplatin- and gentamicin-induced renal injury in male albino rats. In the cisplatin model, the extract at doses of 300 and 600 mg/kg body wt. reduced elevated blood urea and serum creatinine and normalized the histopathological changes in the curative regimen. In the gentamicin model, the ethanol extract at a dose of 600 mg/kg body wt. reduced blood urea and serum creatinine effectively in both the curative and the preventive regimen

மோகத்தினாலே விளைத்த சலம் வெட்டையனல்
ஆகத்தின் பிண்ணோ டருங்கிராணி- போகத்தான்
ஆவாரைப் பஞ்சகங் கொள் அத்தி சுரம் தாகமும் போல்
எவாரைக் கண்மடமாதோ?

இது சருமவியாதி , மூகத்தினால் வரும் வியாதிகள் அனைத்தயும் தீர்க்கும் ஆற்றல் கொண்டது .

ஆவாரம்பூ நீரிழிவு, வறட்சி, கற்றாழை நாற்றம் ஆகியவற்றைப் போக்கும். இலை, பூ, காய், பட்டை, வேர் ஆகியவை நீரிழிவு, வெள்ளை, உட்கரு, புண், எலும்பைப் பற்றிய சுரம், நீர் வேட்கை போன்றவற்றை நீக்கும்.

பூவை வதக்கி கண் நோய்க்கு ஒத்தடமிடலாம்.

இதன் பூவை இனிப்புடன் கிளறி ஹாலவா செய்து சாப்பிட வெள்ளை, மூத்திர ரோகம், ஆண்குறி எரிச்சல் நீங்கும். சொப்பணஸ்கலிதம் நிற்கும். பெரும்பாடு என்னும் நோய் போகும். நீரில் சர்க்கரை குறையும் .

இனி சாலை வழியே போகும் போது ஆவரையை கண்டால் விடாதீர்கள் .பூக்களை சேகரம் செய்து உபயோகியுங்கள் .இனி வரும் மழை காலத்தில் தான் மிகுதியாக கிடைக்கும் .
இது ஒரு வியாபர பயிராகவே பயிர் செய்து அதன் ethanol extract செய்து விற்றால் ,வாங்க உலகம் காத்திருக்கிறது

இந்துப்பு :



இந்துப்பு :
உப்பை சேர்க்காத பொருள்களே இல்லை.உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்று சொல்வார்கள்.இன்று உப்புள்ள பண்டம் குப்பையிலே என்று சொல்லும் அளவுக்கு அயோடின் கலந்த உப்பின் கோர முகம் உள்ளது.அயோடின் சேர்க்கப்பட்ட உப்பால் நமது உடலில் உள்ள தைராய்டு சுரப்பியின் செயல்பாடு பாதிக்கப்பட்டு முக்கியமான நாளமில்லாச் சுரப்பியான தைராய்டு சுரக்கும் சுரப்பு நீர்களான T3 ,T4 ஆகியவை பாதிக்கப்பட்டு விளைவாக உடலின் முழு வளர்சிதை மாற்றமும் பாதிக்கப்பட்டு நடைப் பிணங்களாக உலவும் அவலத்தை நாம் வெகு சீக்கிரம் நாம் காணலாம்.கண்கள் பிதுங்கி கழுத்தில் பெரும் கழலைக் கட்டி வரும் வாய்ப்பு உள்ளது.
பல மருத்துவ குணங்கள் கொண்டது இந்துப்பு . இந்துப்பு சேர்ந்த மருந்தால் குருடனும் பார்வை பெற வல்ல மருந்தொன்றை திருமூலர் வைத்திய சாகரத்தில் சொல்லி உள்ளார்.
அந்தப் பாடல்,
இந்துப்பு திப்பிலி இயல் பீதரோகிணி
நந்திப்பூச் சாற்றில் நயந்து அரைத்திட
அந்தகன் கண்ணுக்கு அருந்ததி தோன்றிடும்
நந்தி நாதன் நயந்து உரைத்ததே
.
-திருமூலர் வைத்திய சாகரம்-
இந்துப்பு, திப்பிலி,பீத ரோகிணி ஆகியவற்றை சமமாய் எடுத்து நந்தியாவட்டம் பூச்சாற்றில் அரைத்து கண்ணிலிட குருடன் கண்ணுக்கு அருந்ததி என்னும் நட்சத்திரம் தெரியும் என்று நந்திக்கு சிவன் கூறியுள்ளார்,என்பதே இதன் பொருள்.
இப்படி மிக உயர் தன்மையுள்ள இந்துப்பை சோற்றுப்பிற்கு பதிலாக உபயோகித்து வந்தால்,உடலிலுள்ள துர் நீர்கள் எல்லாம் நீங்கி உடல் நலம் பெறும்.காயசித்திக்கும்,பத்தியத்திற்கும்,காய கற்பத்திற்கும் ஏற்ற உப்பு இது.

Saturday, 8 February 2014

அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்ற ஃபேஸ் பேக்குகள்

அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்ற ஃபேஸ் பேக்குகள்

பொதுவாக அனைவருமே முகத்தை அழகாகவும், பொலிவாகவும் வைத்துக் கொள்ள வேண்டுமெனில் ஃபேஸ் பேக் போடுவோம். ஆனால் அவ்வாறு போடும் போது, சில சமயங்களில் பயம் ஏற்படும். ஏனெனில், சில பொருட்களை சருமத்தில் பயன்படுத்தினால், அவை சருமத்தில் அரிப்புகள் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். இதற்கு காரணம், அனைவருக்குமே ஒரே வகையான சருமம் இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான சருமம். அவை எண்ணெய் பசையுள்ள சருமம், வறட்சியான சருமம், நார்மல் சருமம் போன்றவை.

மேலும் இந்த ஒவ்வொரு வகையான சருமத்திற்கும், தனித்தனி ஃபேஸ் பேக்குகள் உள்ளன. ஆனால் சிலரால் தமக்கு எந்த வகையான சருமம் உள்ளது என்று தெரியாது. எனவே அத்தகையவர்களுக்காக அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்ற பொதுவான சில ஃபேஸ் பேக்குகளை தமிழ் போல்ட் ஸ்கை பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை சருமத்திற்கு பயன்படுத்தி, சருமத்தை அழகாகவும், பொலிவோடும் வைத்துக் கொள்ளுங்கள்.

முட்டை

அனைத்து வகையான சருமத்திற்கும் முட்டை ஃபேஸ் பேக் சிறந்த பலனைத் தரும். அதிலும், ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, அதில் சந்தனப் பொடி அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், சருமம் மென்மையாவதுடன், அழகாகவும், வறட்சியின்றிவும் இருக்கும். வேண்டுமேனில், முட்டையுடன் சிறிது தேன் சேர்த்து கலந்தும் போடலாம்.

கடலை மாவு மற்றும் தயிர்

கடலை மாவில், தயிர், சிறிது தேன் மற்றும் பால் சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் தேய்த்து கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி முகம் பொலிவோடு இருக்கும்.

மஞ்சள் தூள்

அழகுப் பொருட்களில் ஒன்றான மஞ்சள் தூளை, தயிர் அல்லது பாலுடன் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், சருமத்தில் உள்ள முகப்பருக்கள் மற்றும் கருமை நீங்கி, முகம் அழகாக காணப்படும்.

ரோஸ் வாட்டர்

ரோஸ் வாட்டர் ஒரு நேச்சுரல் டோனர். இதனை அனைத்து வகையான சருமத்தினரும் பயமின்றி சருமத்திற்கு பயன்படுத்தலாம். அதிலும் சந்தன பவுடரில் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, ஃபேஸ் பேக் போட்டால், முகத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி, முகம் பளிச்சென்று இருக்கும்.

தக்காளி

தக்காளியில் லைகோபைன் என்னும் சருமத்தைப் பாதுகாக்கும் பொருள் உள்ளது. எனவே தக்காளியைக் கொண்டு, தினமும் சருமத்தை மசாஜ் செய்து வந்தால், முகத்தில் உள்ள அழுக்கள் அனைத்தும் நீங்கிவிடும்.

தேன்

அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்ற ஒரு சூப்பரான அழகு பராமரிப்பு பொருள் என்றால், அது தேன் தான். ஏனெனில் தேனை சருமத்திற்கு தடவி மசாஜ் செய்து கழுவினால், சருமம் நன்கு அழகாக மாறும். வேண்டுமெனில், தேனுடன் சிறிது தயிர் மற்றும் சந்தனப் பொடியையும் சேர்த்துக் கொள்ளலாம்.

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரியை அரைத்து, அதனை சருமத்திற்கு தடவி மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமம் ஜொலிக்கும்.

வேப்பிலை

வேப்பிலையை அரைத்து, அதனை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.

பப்பாளி

பப்பாளியைக் கொண்டு சருமத்திற்கு ஃபேஸ் பேக் போட்டால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமத்துளைகள் அடைக்கப்பட்டு பருக்கள் வராமல் தடுக்கும். அதற்கு பப்பாளியை அரைத்து, அதனை முகத்தில் தடவி மசாஜ் செய்து, 5-10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

பால்

பால் சருமத்தை இறுக்கமடையச் செய்வதோடு, வறட்சியின்றி வைத்துக் கொள்ளும். அதற்கு பாலை பஞ்சில் நனைத்து, முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்து கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வந்தால், முகம் பொலிவோடு காணப்படும்.

உணவே மருந்து - கம்பு

உணவே மருந்து - கம்பு 
---------------------------------

சோளம்போல கம்பும் ஆப்பிரிக்காவில் இருந்து வந்ததுதான். ஆனால், கி.மு. 2500-களிலேயே இங்கு கம்பு பயிரிடப்பட்டு இருந்தது என்பதற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளன. சங்க இலக்கியப் பாடலிலும் சித்த மருத்துவப் பயன்பாட்டிலும் இந்தத் தானியம் இருப்பதே இதன் தொன்மைக்குச் சான்று.

அரிசியைக் காட்டிலும், கனிமம், கால்சியம், புரதம், இரும்பு, உயிர்ச் சத்து என அனைத்துச் சத்துகளுமே அதிகம் கொண்ட தானியம் கம்பு !! அரிசியை விட கிட்டத்தட்ட 8 மடங்கு அதிக இரும்புச் சத்து !!

கன்னடத்தில், 'பஜ்ரா’ என்று அழைக்கப்படும் இந்தக் கம்பு, கர்நாடகத்திலும் ஒரு சில வட மாநிலங்களிலும் இன்றும் மிகப் பிரபலம்.

வேகவைக்க கொஞ்சம் மெனக்கெட வைக்கும் இதனை, சாதாரண அரிசிபோல அப்படியே கழுவி வேகவைக்க முடியாது. மிக்ஸியில் ஓர் அடி போட்டு, இரண்டாக உடைத்து, இரண்டு மணி நேரம் ஊறவைத்து, அதன் பின் உலையில் போட்டு வேகவைத்தால்தான் நல்ல குழைவாக வரும். ஆனால், சுவையிலோ, பிற அரிசி வகையறாக்கள் கம்பின் பக்கத்தில் வர முடியாது. அத்தனை அருமையாக இருக்கும்.

வளரும் குழந்தைகளுக்கும் மாதவிடாய் துவங்கிய பெண் குழந்தைகளுக்கும் மாதம் 45 முறை கண்டிப்பாகத் தர வேண்டிய தானியம்.

பொதுவாக, கம்பு என்றாலே அதனைக் கூழாக, கஞ்சியாகத்தான் சாப்பிட வேண்டும் என்ற நினைப்பு நம்மில் பலருக்கும் உண்டு. 'சிறைக்குப் போனால் கம்பங்களிதான் தின்ன வேண்டும்’ என்பது போன்ற பேச்சுகளும் இதற்குக் காரணம். ஆனால் கஞ்சியாக மட்டும் அல்ல; சாதமாக, அவலாக, பொரியாக... எப்படி வேண்டுமானாலும் கம்பைச் சாப்பிடலாம்.

அருமையான நாட்டுக் கோழி பிரியாணியோ, ஹைதராபாத் தம் பிரியாணியோகூட கம்பில் செய்து கலக்கலாம். கம்பை இரண்டாக உடைத்து, தண்ணீரில் ஊறவைத்து, அதற்குப் பின் நெல் அரிசியில் எப்படி பிரியாணி செய்கிறீர்களோ அப்படியே செய்ய வேண்டியதுதான். கோழி மீது இரக்கம் உள்ளவர்கள், பீன்ஸ், கேரட், ரொட்டித் துண்டு போட்டு வெஜிடபிள் பிரியாணியும் செய்யலாம்.

கம்பு ரொட்டி சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். கம்பில் உள்ள லோ கிளைசிமிக் தன்மையாலும், அதில் ஏற்கெனவே உள்ள கூடுதல் நார்ச் சத்தினாலும், காலை/ மதிய உணவில் இதை எடுக்கும்போது பட்டை தீட்டிய அரிசிபோல், கம்பு ரொட்டியும் கம்பஞ்சோறும் பிரச்சனையைத் தராது. அரிசியைப் போல் அல்லாமல், கம்பரிசி, உமி தொலி நீக்கிய பின்னரும் அதன் உள் பகுதியில் அத்தனை நல்ல விஷயங்களையும் தன்னகத்தே வைத்திருக்கும்.

சர்க்கரை நோயாளிகளுக்கும் எடை குறைக்க விரும்புவர்களுக்கும் மிக ஏற்றது

தவிர, இதில் உள்ள 'அமைலோஸ் அமைலோபெக்டின்’ அமைப்பு நெல் அரிசியைக்காட்டிலும் மாறுபட்டது. இன்னும் இறுக்கமானது. அதனால்தான், சீரணத்துக்கும் கொஞ்சம் தாமதமாகிறது. இந்த அமைப்பினால் மெள்ள மெள்ளவே கம்பின் சர்க்கரையை ரத்தத்தில் கலக்கச் செய்வதால், லோகிளைசிமிக் உணவாக இருந்து சர்க்கரை நோயாளிக்குப் பெரிதும் உதவுகிறது. சத்துச் செறிவு அடர்த்தியாக உள்ள கனத்த உணவு என்பதால், என்னதான் பிடித்த குழம்பை, பிடித்த கையுள்ளவர் பரிமாறினாலும் கம்பு சாதத்தை ஒரு கட்டு கட்ட முடியாது. அளவாகச் சாப்பிடுவதால், எடை குறைக்க விரும்புவோருக்கும் இது ஓர் அற்புதத் தானியம் !!

இன்று பலரும், நான் ''டயபடிக் சார். அரிசியே சாப்பிடுறது இல்லே. வெறும் சப்பாத்திதான் மூணு வேளையும்'' என்பார்கள். அது தேவையே இல்லை. சர்க்கரை நோய்க்கான சரியான சிகிச்சையை உங்கள் குடும்ப மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துக்கொண்டு, வாரம் இரு நாள் கம்பஞ்சோறு, இரு நாள் புழுங்கல் அரிசிச் சோறு, இன்னொரு நாள் தினை சாதம், இரவில் கேழ்வரகு அடை, எப்போதாவது காலை உணவாக வரகரிசிப் பொங்கல், சோள தோசை, குதிரைவாலி இட்லி என்று சாப்பிடப் பழகினால், சாப்பாத்திக்கு அடிமை வாழ்க்கை வாழ வேண்டிய அவசியம் இல்லை.

இப்படிப் பல தானியங்களையும் கலந்து எடுத்துக்கொள்வதுடன் கொஞ்சம் உடல் உழைப்பும் கொடுத்து வாழுங் கள். உங்கள் சர்க்கரை நோய் எப்போதும் கட்டுக்குள்ளேயே இருக்கும்.

மைசூரில் இயங்கிவரும் மத்திய அரசின் உணவுத் தொழில்நுட்ப உயர் நிறுவனம் (சி.எஃப்.டி.ஆர்.ஐ.) தன் பல ஆய்வுகளில், இந்தச் சிறுதானியங்கள், அரிசி, கோதுமையைக் காட்டிலும் பல வகைகளில் சிறந்தது என்பதையே மீண்டும் மீண்டும் சொல்கிறது. கம்பு சம்பந்தமாகச் சமீபத்தில் படித்த ஓர் ஆச்சர்யமான விஷயம்... செல்கள் பாதுகாப்புக்கு கம்பு உதவும் என்பது. கொஞ்சம் சூட்டு உணவு என்பதால், கம்பு சாப்பிடும்போது குளிர்ச்சிக்கு மோர், சின்ன வெங்காயத்தைச் சேர்த்துக்கொள்வது நல்லது.

உணவே மருந்து - எப்போது?

உணவே மருந்து - எப்போது?

நன்றாக பசித்தபின்பு தான் சாப்பிட வேண்டும். பசி இல்லாத போது சாப்பிட வேண்டாம். பசிக்கும் போது சாப்பிடாமல் இருக்கவும் வேண்டாம்.ஏற்கனவே சாப்பிட்ட உணவு ஜீரணமான பின்னரே அடுத்த வேளை உணவை சாப்பிட வேண்டும்.

அவசரம் அவசரமாக சாப்பாட்டை உள்ளே தள்ளக் கூடாது. நிதானமாக, நன்றாக மென்று, ஆற, அமர உட்கார்ந்து சாப்பிட வேண்டும். நொறுங்கத் தின்றால் நூறு வயது என்று சும்மாவா சொன்னார்கள்?

சாப்பிடும்போது அதில் மட்டுமே கவனம் இருக்க வேண்டும். டிவி பார்ப்பதோ, புத்தகங்கள் படிப்பதோ கூடாது. போனில் பேசுவதும் நல்லதில்லை.

எரிச்சலோ, கோபமோ, இயலாமையோ, குழப்பமோ என உணர்ச்சிக் குவியலாக இருக்கும்போது சாப்பிட வேண்டாம். அது உணவின் ருசியை மறக்கச் செய்யும்.

இரவு சாப்பிட்டவுடன் படுத்து விடக் கூடாது. சிறிது தூரம் உலாவி விட்டு வரலாம். சாப்பிட்டு ஒரு மணி நேரம் பின்னர் தூங்குவதுதான் நல்லது.

நல்ல உணவு கிடைக்காமல் உலகம் முழுவதும் பல பட்டினிச் சாவுகள் இன்றளவும் நடக்கிறது. எனவே ஒருபோதும் உணவை வீணாக்காதீர்கள்.

மிளகின் அற்புதமான மருத்துவக் குணங்கள்

மிளகின் அற்புதமான மருத்துவக் குணங்கள்

வரலாற்று ஆசிரியர்கள் கூற்றுப்படி கிமு 3000 ஆம் ஆண்டுகளிலிருந்து சிறந்து விளங்கிய கடல் வியாபாரத்தில் தங்கம் போல் விலை மதிக்க முடியாத ஒன்று மிளகு.

மிளகை வீணடித்தால் உப்பு போட்டு அதில் நாள் முழுவதும் மண்டியிட வைக்கும் தண்டனை போர்ச்சுகல் நாட்டில் நடைமுறையில் இருந்தது.

மிளகில் உள்ள சத்துக்கள்:

தாது உப்புகள்
1. கால்சியம்
2. பாஸ்பரஸ்
3. இரும்பு

வைட்டமின்கள்
1. தயாமின்
2. ரிபோபிலவின்
3. ரியாசின்

சளித் தொல்லைக்கு:
மிளகை நன்றாக பொடித்து அதனை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர சளி தொல்லைகள் மற்றும் சளியினால் ஏற்படும் தொல்லைகளான மூக்கு ஒழுகுதல் குணமாகும். அதிகமாக சளி தொல்லைகள் உள்ளவர்கள் மிளகை நெய்யில் வறுத்து பொடித்து அதனை தினம் அரை ஸ்பூன் முன்று வேளை சாப்பிட்டு வர குணமாகும்.

கொஞ்சம் மிளகு, ஓமம், உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் தொண்டை வலி குணமடையும். கல்யாண முருங்கை இலையுடன், அரிசி சிறிது மிளகு சேர்த்து அரைத்து தோசை செய்து சாப்பிட்டு வர சளி குணமாகும்.

FILEபற்களுக்கு:
மிளகுடன் உப்பு சேர்த்து பல் துலக்கினால் பல்வலி, சொத்தை பல், ஈறுவலி, ஈறுகளிலிருந்து இரத்தம் வடிதல் குணமாகும், பற்களும் வெண்மையாக இருக்கும், வாயில் துர்நாற்றத்தை போக்கும்.

தலைவலி:
மிளகுடன் வெல்லம் சேர்த்து காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் தலைவலி, தலைபாரம் குணமாகும். மிளகை அரைத்து அதனை தலையில் பற்று போட்டால் தலைவலி குணமாகும். மிளகை சுட்டு அதன் புகையினை இழுத்தால் தலைவலி தீரும்.

இரத்தசோகைக்கு:
கல்யாணமுருங்கை இலை, முருங்கை இலை, மிளகு மற்றும் பூண்டு சேர்த்து அவித்து சாப்பிட்டு வந்தால் இரத்தசோகை குணமாகும் .

பசியின்மைக்கு:
ஒரு ஸ்பூன் அளவு மிளகை வறுத்து பொடி செய்து அதனுடன் கைபிடியளவு துளசியை சேர்த்து கொதிக்க வைத்து அதனை ஆற வைத்து அதனுடன் சிறிது அளவு தேன் கலந்து சாப்பிட்டு வர பசியின்மை குணமாகும் மற்றும் வயிறு உப்பசம் குணமடையும்.

மிளகு வயிற்றில் உள்ள வாய்வை அகற்றி உடலுக்கு வெப்பத்தை தருவதோடு வீக்கத்தை கரைக்கும் தன்மையுடையது. மிளகு உணவை எளிதில் செரிக்க வைக்கும் தன்மை கொண்டது. மிளகு, சுக்கு, திப்பிலி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

மிளகு இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது.

அறு சுவைகளும் நம் ஆரோக்யத்திற்கு

அறு சுவைகளும் நம் ஆரோக்யத்திற்கு மட்டுமல்ல, நம் மனதில் தோன்றும் எண்ணங்களுக்கும், உணர்வுகளுக்கும் கூட காரணமாக இருக்கின்றன. எனவேதான் ஆன்மிக சாதகர்களுக்கு நாவடக்கம் கட்டாயப் படுத்தப்பட்டுள்ளது. அறு சுவைகளைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம். 
இனிப்பு - மண் நீர் இணைந்தது. நெருப்புத் தன்மை பொருந்தியது. இளக்கமானது. செரிமானக் காலம் மிகுவது.எலும்பு, சதை, குருதி, கொழுப்பு,சாறு, சுக்கிலம் ஆகிய உடல் தாதுக்களுக்கு ஊட்டமளிக்கிறது. உடலைப் பெருக்க வைப்பது. குரக்கு நல்லது.
புளிப்பு - மண் தீ இணைந்தது. பசியைத் தூண்டும். ஜீரணத்தை மிகைப் படுத்தும். உணவின்பால் வேட்கையும் சுவை உணர்வையும் ஏற்படுத்தும். வெப்பத்தை கூட்டும்.
உவர்ப்பு - நீர் தீ இணைந்தது. உப்பு சுவை என்றழைப்பர். உப்பு உடல் உறுப்புகளுக்குள் கசிவையும் இசைவையும் ஏற்படுத்தும். வியர்வையை மிகுதிப்படுத்தி வெளியேற்றும்.
கைப்பு(கசப்பு) - நீர் வளி . இந்த சுவையை யாரும் விரும்புவதில்லை. ஆனால் இதுதான் உடலுக்கு உறுதுணையாகிறது. பூச்சிகளைக் கொல்கிறது. விஷத்தை முறிக்கிறது. குறைந்தால் குருதி தூய்மை கெடுகின்றது.
கார்ப்பு(காரம்) - தீ வளி இணைந்தது. உணவின்பால் நாட்டத்தை உண்டாக்கும். செரிப்பாற்றலை மிகுவிக்கும்.விந்து நீற்றுப் போகும். உடல் ஆற்றல் குறையும். உடலில் நடுக்கம் ஏற்படும். வலிப்பு நோய் ஏற்படக் கூடும்.
துவர்ப்பு - மண் வளி இணைந்தது. செரிமானத்தைக் குறைக்கும். மிகுந்தால் வயிறு பொருமும். மலம் சிக்கும். சிறுநீர் தடைப்படும். ஆண்மை, பெண்மை குறையும். உறுப்புகளின் உந்தும் ஆற்றல் குறையும். குறைந்தால் குருதி கெடும். கசியும்.

அறுசுவைகள் இந்த அளவிற்கு நம் உடலில் முக்கியமான கிரியா ஊக்கிகளாக விளங்குகின்றன. வள்ளுவப் பெருந்தகை சொல்லும் போது
''யாகாவார் ஆயினும் நாகாக்க; காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு'', என்பார். நாம் பொதுவாக நாவடக்கம் என்றால் பேசுவதைக் குறித்து பொருள் கொள்வோம். ஆனால், நாவடக்கம் என்பதை உணவில் சுவை ஆர்வத்தைக் குறைத்துக் கொள்வதையோ அல்லது சுவைகளைக் கைவிடுவதையோ கூட பொருளாகக் கொள்ளலாம். உப்பு, காரம், புளிப்பு போன்ற சுவைகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளும் போது நம் உணர்வுகள் தறிகெட்டு ஓடுகின்றன. விளைவு தவறான எண்ணங்கள் தவறான செயல்களுக்கு காரணமாக அமைந்து விடுகின்றன. நம் முன்னோர்கள் பண்டைய காலங்களில் துறவறம் மேற் கொள்ளும் போது உணவு வகைகளில் சுவைகளை கைவிட்டு விடுவார்கள். உப்பு இல்லாமல் சாப்பிட்டு என்னை நானே பரிசோதித்துக் கொண்டதுண்டு. தீவிரமான பிரம்மச்சரியம் மேற் கொள்பவர்கள் உணவில் சுவைகளை அறவே நீக்கி விடுவார்கள்.

ஆசைகள் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டிருக்கின்றன. ஐம்பொறிகள் வாயிலாகவும் ஆசைகள் உருவெடுக்கின்றன. தீவிரமான பிரம்மச்சரியத்தில் எந்த ஆசைக்கும் இடமில்லை. மற்ற நான்கு விஷயங்களையும் மனிதன் கட்டுப்படுத்தி வைத்து விட முடியும். ஆனால், உணவு உண்ணாமல் வாழ்வது என்பது இயலாத காரியம். வேண்டுமானால் உணவைக் குறைத்துக் கொள்ளலாம். அப்படி உணவு என்று உண்கிற போது அதை சுவைக்காமல் இருக்க முடியாது. அப்படி சுவைதந்து உண்ணுகிற போது அந்த சுவையில் பற்று வைக்காமல் இருந்து பழக வேண்டும். முதலில் மிகவும் கடினமாகத்தான் இருக்கும். உப்பு, காரம் இல்லை என்றால் எவ்வளவு நல்ல உணவாக இருந்தாலும் உண்ண முடியாது. ஆனால், பற்றுகளை அறுத்தவர்களுக்கு அது சாத்தியமாகிறது.
அந்த அறுசுவைகள் முறையாக அமையாது போய்விடும் போதும் அந்தச் சுவையைக் கருத்தில் கொள்ளாது அவர்கள் உண்ண முடியும். நாவை வென்றவர்களுக்கு இது சாத்திய மாகிறது.

ஒரு மனிதனுக்கு ஆசை அடங்கி இருக்கிறதா என்பதை இந்த நாவடக்கத்திலிருந்து அறிந்து கொள்ள முடியும். எல்லா ஆசைகளையும் அடக்கியவனே துறவி. அவனே ப்ரம்மச்சரியம் கடைபிடிக்க முடியும். ஆசையை அவன் எவ்வளவு தூரம் அடக்கியிருக்கிறான் என்பதை சுவை என்ற விஷயத்தில் நாவை அவன் எந்த அளவுக்கு அடக்கியிருக்கிறான் என்பதை வைத்து தெரிந்து கொள்ள முடியும். முற்காலங்களில் சீடனின் ஆசையை அளந்தெடுப்பதற்கு குருவிற்கு நாவடக்கமே பயன்பட்டுள்ளது. ப்ரம்மச்சரிய விரதத்தில் நான்கு நிலைகள் உண்டு. அந்த நான்கு நிலைகளைப் பெற்றிருப்பவன் இயல்பாகவே நாவடக்கம் உடையவனாகவே இருப்பான்